வேலூரில் நாளை முதல் பேருந்துகள் இயக்கம்

வேலூரில் நாளை முதல் நகர பேருந்துகளை முழுமையாக இயக்க முடிவு. புறநகர் பஸ்கள் தேவைக்கேற்ப இயக்கப்படும் என வேலூர் மண்டல பொதுமேலாளர் தகவல்;

Update: 2021-06-27 02:51 GMT

ஊரடங்கு தளர்வு காரணமாக பேருந்து போக்குவரத்துக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் மண்டலத்தில் நகரப்பேருந்துகள் முழு அளவிலும், புறநகர் பேருந்துகளை தேவைக்கேற்ப இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் நடராஜன் தெரிவித்தார்.

ஏற்கனவே சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் உட்பட 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இதையடுத்து அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலத்தில் 620 பேருந்துகளில் 70 சதவீத பேருந்துகள் இயக்க ஆலோசனை நடந்து வருகிறது. வேலூர் மண்டலத்தில் இருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு மட்டும் பேருந்துகளை இயக்குவதற்காக பஸ்களை முழுமையான அளவில் தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது .

பேருந்துகளின் இன்ஜின், சக்கரங்கள், பிரேக் செயல்பாடு என முழுமையாக பரிசோதித்து கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்படுகிறது. அதே போல் வேலூர் பழைய பஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று\வருகிறது .

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக்க ழக வேலூர் மண்டல பொது மேலாளர் நடராஜனிடம் கேட்டபோது , ' வேலூர் மண்டலத்தில் 620 பேருந்துகள் உள்ளன . ஏசி மற்றும் வால்வோ பேருந்துகளை தவிர்த்து நகர  பேருந்துகளை முழுமையாகவும் , புறநகர் பேருந்துகளை தேவைக்கேற்ப இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது . வேலூர் அரசு போக்குவரத்துக்கழக மண்டலத்தில் இருந்து அனுமதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் ' என்றார் .

Tags:    

Similar News