வேலூர் மாவட்ட பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பிக்கலாம்

வேலூர் மாவட்ட பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்

Update: 2022-04-23 12:46 GMT

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் 

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டப்படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. வகுப்பில் குறைந்த பட்சம் 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குதல் சார்பாக இணையதளம் வழியாக விண்ணப்பங்களை 18.05.2022 வரை பள்ளிக் கல்வி துறையின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

rte.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில்  பதிவேற்றம் செய்யவதற்கான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் பெற்றோர்கள் அந்தந்த ஒன்றியங்களிலுள்ள வட்டாரக் கல்வி அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வட்டார வளமைய அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்களிலும் இணைய வழியில் விண்ணப்பிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

நலிவடைந்த பிரிவினர்- ஆண்டு வருமானம் ரூ.2, லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி 3. சிறப்பு பிரிவினர்கள், ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளியாக இருக்கும் குழந்தை, மூன்றாம் பாலினத்தவர், எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட குழந்தை, துப்புரவு தொழிலாளியின் குழந்தைகள்

பதிவேற்றம் செய்யும்போது, இருப்பிடச் சான்றிற்கான ஆதாரம் (குடும்ப அட்டை / ஆதார் அட்டை). சாதிச் சான்று. ஆண்டு வருமானச் சான்று. பிறப்புச் சான்று குழந்தையின் சமீபத்திய புகைப்படம் -2,  குழந்தையின் வயதை நிரூபிப்பதற்கான ஏதேனும் ஒரு சான்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட பள்ளியில் எல்.கே.ஜி. சேர்க்கைக்கு 31.07.2022 அன்று 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News