வேலூர் மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சித் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடிவு

வேலூர் மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சித் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-03-22 15:29 GMT

மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது


வேலூர் மாவட்ட ஊராட்சி குழு சார்பில் உணவு மற்றும் வேளாண்மை குழுவின் முதல் நிலைக்குழு கூட்டம் நடந்தது. கூட் டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு தலைமை தாங்கினார். துணைத்தலை வர் கிருஷ்ணவேணிமுன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு செயலாளர் சரண்யா தேவி வரவேற்று பேசினார்.

வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீட்சித் கலந்து கொண்டு பேசினார். அதில் வேலூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை சார்ந்த வளர்ச்சித் திட்டங்களை மாவட்ட ஊராட்சியின் உணவு மற்றும் வேளாண்மை குழுவிற்கு விவரிக்கப்பட் டது.

வேளாண்பொறியியல் துறை சார்ந்த வளர்ச்சித்திட்டங்களையும் , மாவட்ட வழங்கல் துறை சார்ந்த மாவட்ட ஊராட்சியின் உணவு மற்றும் வேளாண்மை குழுவிற்கு விவரிக்கப்பட்டது.

மேலும் வேலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை அனைத்து மாவட்ட கவுன்சிலர்களும் தங்களது பகு திகளில் முழுமையாக செயல்படுத்தப்படுவது என்று முடிவு செய்தனர்.

மேலும் கிராமங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்குதல், சாகுபடிப் பரப்பை உயர்த்துதல், விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கான திட்டப்பணிகளை மேற்கொள்ளுதல், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தேவைகள் என்ன? என்பது குறித்து அறிக்கையாக பெறப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிவர்த்தி செய்யப்பட உள்ளது.

மேலும் அடிப்படை தேவைகள், ஒவ்வொரு துறைக்கும் அதன் சார்ந்த கோரிக்கைகள் கொண்டு சென்று பொதுமக்களுக்கு தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட ஊராட்சி குழுவில் கல்வி, வேளாண், குடிநீர், மின்சாரம் போன்ற 7 நிலைக்குழுகள் அமைக்கப்பட்டுள்ளது. 3 மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு நிலைக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று அதிகாரி கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News