வேலூர் மாவட்டத்திற்கு 6 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வந்து சேர்ந்தது
2 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி உட்பட மொத்தம் 6 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வேலூர் மாவட்டத்துக்கு வந்து சேர்ந்தது
வேலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வந்தது . நேற்று சற்று அதிகரித்து 24 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது . இந்நிலையில் இந்த எண்ணிக்கை அப்படியே இரட்டிப்பாகி இன்று மாவட்டம் முழுவதும் பரவலாக 46 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது .
இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்துக்கு 9 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன . இந்த தடுப்பூசிகள் கடந்த 2 நாட்களாக பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி உட்பட மொத்தம் 6 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வேலூர் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . கோவாக்சின் தடுப்பூசி மட்டும் 2 வது டோஸ் தேவைப்படுபவர்களுக்கு போடப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .