நாளை பிளஸ்-2 தேர்வுகள் தொடக்கம்: வேலூரில் 16,107 மாணவர்கள் எழுதுகின்றனர்
நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் வேலூர் மாவட்டத்தில் 73 தேர்வு மையங்களில் 16,107 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. வருகிற 28-ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. வேலூர் மாவட்டத்தில் 73 தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 7,527 மாணவர்கள் 8,580 மாணவிகள் உள்பட 16,107 பேர் தேர்வு எழுதுகின்றனர். திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தேர்வு மையங்களில் குடிநீர், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காப்பியடிப்பதை தடுப்பதற்காக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் இருப்பார்கள். அனைத்து மையங்களிலும் சோதனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு குறித்த நேரத்தில் வந்து விட வேண்டும். கால தாமதம் செய்யக்கூடாது. தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.