ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு - ஆக்சிஜன் தான் கிடைக்கவில்லை - அமைச்சர்

ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது.

Update: 2021-05-15 09:46 GMT

வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வதால் படுக்கை வசதியை நாங்கள் மேலும் ஆயிரம் படுக்கை வசதிகளை உயர்த்துகிறோம் ஆனால் ஆக்சிஜன் தான் கிடைக்கவில்லை என தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளளார்.

வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகள் மேம்படுத்துதல் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது

இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ,கைத்தறி மற்றும் கதர் துறை அமைச்சர் காந்தி,சட்டமன்ற உறுப்பினர்கள் அமுலு,பூவை ஜெகன்மூர்த்தி,கார்த்திகேயன் ,டி.ஐஜி காமினி உள்ளிட்ட சுகாதாரத்துறையினரும் கலந்துகொண்டனர்

இக்கூட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வதால் அவர்களின் உயிரை காப்பாற்ற என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மேலும் படுக்கைகள் எண்ணிகையை உயர்த்துவது ஆக்சிஜன் தட்டுபாட்டை சமாளிப்பது செவிலியர் மருத்துவர்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சணைகள் குறித்து விவாதித்தனர்

பின்னர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூர் மாவட்டத்தில் அதிக அளவு படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படுகிறது

இதற்காக வேலூர்தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது அதனை தவிர அமைச்சர் காந்தியும் கூடுதல் படுக்கைகள் தருவதாக கூறியுள்ளார்

இம்மாவட்டத்தில் கொரோனாவை சிறப்பாக கையாள்கின்றனர் மாவட்ட நிர்வாகத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன் உயிர்களை காப்பாற்ற இந்த அரசு முழு முயற்சி செய்கிறது ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது அதனை போக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறினார்

Tags:    

Similar News