பசித்தால் எடுத்துக்கொள் பணம் வேண்டாம்.
வேலூர் மாவட்டத்தில் மனித நேயத்தை வளர்க்கும் கொரானா தொற்று.;
ஒருங்கினைந்த வேலூர் மாவட்டத்தில் கொரானா தொற்று புயல் வேகத்தில் பரவி வருகிறது
மாவட்டத்தில் பல மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. கொரானா முதல் அலையின்போது பல சமூக ஆர்வலர்கள் முன் வந்து அரிசி, மளிகை பொருட்கள் உணவு ஆகியவற்றை பொதுமக்களுக்கு அளித்து வந்தனர்.
ஆனால் இரண்டாம் அலையில் ஏனோ இப்பணியில் சமுக ஆர்வலர்கள் இப் பணியில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.சில இடங்களில் இது போன்று சமுதாய பணிகள் வழக்கம் போல் நடந்து வருகிறது,
எடுத்துகாட்டாக வேலூர் மாவட்டம் பொய்கை பகுதியில் சீனிவாசா மினி ஹாலின் உரிமையாளரும், வேலூர் மிட்டவுன் ரோட்டரி சங்க உறுப்பினர் குமார் தலைமையில் இன்று 100 நபர்களுக்கு சுடச்சுட காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது .அத்துடன் போனஸாக முககவசம் மற்றும் கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது.
இன்று தொடங்கி லாக்டவுன் முடியும் வரை தொடரும் இந்த திட்டத்திற்க்கு "பசித்தால் எடுத்து கொள்ளுங்கள் பணம் வேண்டாம்" என்று பெயரிடப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் சென்டரல் பாங்க் ஆப் இந்தியா மேனேஜர் சுகேஸ் , பொய்கை ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் சுந்தர் விரிஞ்சிபுரம் து. ஆய்வாளர் (காவல்) சீனிவாசன் பொய்கை பஞ்சாத்து கிளர்க் ராஜ் உள்பட சமுக ஆர்வலர்கள் 50-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் பலர் தங்களாகவே முன்வந்து நாங்களும் எங்களால் முடிந்த உனவை தருகிறோம் என்று வாக்களித்தனர். இதன் இடையே இங்கு உணவு கொண்டு வர ஆட்டோ இலவசமாக அனுப்பபடும் என்று ஆட்டோ ஓட்டுனர் இன்பநாதன் என்பவர் உறுதி அளித்தது அனைவரையும் நெகிழச்செய்தது.
எப்படியோ பசித்தால் எடுத்து கொள்ளுங்கள் பணம் வேண்டாம் திட்டம் 100- பேரில் தொடங்கி 1000 - பேராக வளர்வது உறுதி, கொரானா தொற்று மனிதநேயத்தை வளர்க்கிறது என்று கூறினால் அது மிகையாகது.