பாலாற்றில் தேங்கிய நீரை குடித்த வாத்துக்கள் உயிரிழப்பு
உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை, கால்நடை பராமரிப்பு துறையினர் விசாரணை.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சஞ்சீவிராயபுரத்தை சேர்ந்தவர் சுதாகர்(38). கடந் 20-ஆண்டுகளுக்கு மேலாக வாத்து வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வேலூர் அடுத்த பெருமுகை பகுதி பாலாற்றங்கரையில் குடில் அமைத்து கடந்த 38 நாட்களாக தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்து குஞ்சுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் வாத்துக்களை மேய்ச்சலுக்கு இட்டு சென்று பாலாற்றில் குட்டை போல் தேங்கிய நீரை அருந்த வீட்டுள்ளனர். நீர் அருந்த ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே வாத்து குஞ்சுகள் கொத்துக்கொத்தாக துடிதுடித்து உயிரிழந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சுதாகர் தண்ணீரில் இருந்து வாத்துக்களை மீட்டு கரையில் விட்ட போதும் சுமார் 5000 வாத்து குஞ்சுகள் உயிரிழந்துள்ளது.
வழக்கம் போல மேய்ச்சலுக்கு சென்று தண்ணி காட்டிய உடனேயே இறந்து விட்டது. என்ன காரணம் என தெரியவில்லை. கடன் வாங்கி வாத்துக்களை வளர்த்து வருகிறோம். இதனால் தங்களுக்கு 5-லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார். இறித்து வேலூர் மாவட்ட கால்நடை துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் படி கால்நடை பராமரிப்பு துறையினர் உயிரிழந்த வாழ்த்துக்களை பிரேத பரிசோதனை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் வாத்துக்கள் அருந்திய தண்ணீர் மாதிரியையும் எடுத்து சோதனைக்குட்படுத்தி வருகின்றனர். மேலும் அதிகாரிகள் தெரிவிக்கையில் வாத்துக்கள் பறவை காய்ச்சலால் உயிரிழக்க வாய்ப்பு குறைவு, இருந்த போதும் வேறேதும் காரணங்களுக்காக உயிரிழந்திருக்கலாமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் வாத்துக்களின் உடற்கூறு ஆய்வு மற்றும் தண்ணீர் மாதிரி முடிவுகள் வந்த பின்னரே முடிவு தெரியவரும் என கூறினர்.