ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தாய்மார்களுக்கான அறை திறப்பு
தாய்மார்கள் பயன்பாட்டுக்காக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தாய்மார்கள் பாலுட்டும் அறையை திறந்து வைத்தார் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பிரச்சனைகளுக்காக வருகை தரும் தாய்மார்கள் பாலூட்டுவதற்க்கு சிறமப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்படும் என ஆட்சியர் சண்முகசுந்தரம் உறுதியளித்தார். இதனை அடுத்து ஆட்சியர் அலுவலாக வளாகத்தில் பூங்கா அமைந்துள்ள இடத்தில் உள்ள அறையை ஆட்சியர் அலுவலகம் வரும் தாய்மார்கள் பாலூட்டுவதற்கும், அரசு பெண் ஊழியர்களின் குழந்தைகளை பாரமரிப்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்ட அறையினை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று திறந்து வைத்தார். அனைத்து வேலை நாட்களிலும் இவ்வறை செயல்படும் என்றும் இதனை தாய்மார்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.