எருதுவிடும் விழா - பார்வையாளர்கள் உற்சாகம்
பனமடங்கி கிராமத்தில் கலைகட்டிய எருதுவிடும் விழா - பார்வையாளர்கள் உச்சாகம்.;
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் எருதுவிடும் விழா நடைபெறுவது வழக்கம். கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு வாழிகாட்டு நெறிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்திருந்தது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 82 கிராமங்களில் எருதுவிடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இன்று இரண்டாவது நாளாக லத்தேரி அடுத்த பனமடங்கி கிராமத்தில் எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குறைந்த கால அளவில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை ஓடி கடக்கும் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. இந்த எருதுவிடும் விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். மேலும் பலத்த காவல் துறை பாதுகாப்பும், மாட்டு உரிமையாளர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்க்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 5-க்கும் மேற்பட்டோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.