மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீ குளிக்க முயற்சி : வேலுாரில் பரபரப்பு

Update: 2020-12-21 09:34 GMT

வேலூர் மாவட்டத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டார் சம்மதிக்காததால் பாதிக்கப்பட்ட பெண் வீட்டார் ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த கெத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தினகரன்(55). கூலி தொழிலாளி. இவரது மகளுக்கு கடந்த அக்டோபர் 29 ம் தேதி அன்று அதே பகுதியை சேர்ந்த கோகுலன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் தற்போது மாப்பிள்ளை கோகுலனை அவரது உறவினரான பிரபாகரன், ராஜேஷ், மார்கபந்து, வினோத், வாசு ஆகியோர், தனது பெண்ணை கல்யாணம் செய்ய தடைபோட்டு மாப்பிளையை தலைமறைவாக்கியுள்ளனர். இது குறித்து காவல் துறையில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக கூறி பெண்ணின் தந்தை தினகரன் என்பவர் இன்று வேலூர் ஆட்சியர் மாவட்ட அலுவலகத்தில் குடும்பத்துடன் தீ குளிக்க முயற்சித்தார். தீ குளிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தி சத்துவாச்சாரி காவல் துறையினர் அவர்களை அழைத்து சென்று விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News