வேலூர் மாவட்ட செஞ்சிலுவை சங்க அலுவலகத்திற்கு சீல்
வேலூர்மாவட்டத்தில் உள்ள மாவட்ட செஞ்சிலுவை சங்க அலுவலகத்திற்கு சீல் நிர்வாக மாற்றத்திற்காக சீல் வைக்கப்பட்டதாக ஆட்சியர் அறிவிப்பு.;
வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அண்ணா சாலையில் மாவட்ட அளவிலான செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலகம் உள்ளது. இந்த சங்கத்தின் சார்பில் பொய்கையில் முதியோர் இல்லமும், சத்துவாச்சாரியில் சிறிய மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிர்வாக குழு இன்று காலை ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் கூடியது. தற்போது செயல்பட்டு வரும் இந்த குழுவினரிடையே ஒற்றுமையில்லை என்றும், சங்கத்திற்க்கு வரும் நிதியில் முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததால் மாவட்ட ஆட்சியர் செஞ்சிலுவை சங்கத்தின் கமிட்டியை கலைக்க உத்தரவிட்டார். மேலும் அத்துடன் செஞ்சிலுவை சங்க கட்டிடத்திற்கு மூடி சீல் வைக்கப்பட்டது. இது குறித்து ஆட்சியரிடம் கேட்ட போது நிர்வாக காரணங்களுக்காக செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் குழு மாற்றியமைக்கப்படவுள்ளதாலும் மேலும் புதிய உறுப்பினர்க்ளை சேர்த்து வலுப்படுத்தவுள்ளதால் குழு கலைக்கப்பட்டதாகவும் விரைவில் குழு மாற்றியமைக்கபடும் என்றும் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சிதலைவரை தலைவராக கொண்டு இயங்கும் இந்த செஞ்சிலுவை சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.