'அவர் சொல்லியா நான் கொடுத்தேன்?' அமைச்சர் ராஜகண்ணப்பன் ஓபிஎஸ் மீது காட்டம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓபிஎஸ் சொல்லியா ஓய்வூதிய நிலுவையை வழங்கினேன் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் ஓபிஎஸ்க்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-04 11:14 GMT

போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தமிழக அரசு வழங்கிய ஓய்வூதிய நிலுவைத் தொகையை ஓபிஎஸ் கூறியதால் வழங்கியதாக அவர் தெரிவித்திருப்பது அவரது அனுபவமில்லாத  அரசியலை காட்டுகிறது என்று  போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவையில் இருந்த ஓய்வூதிய தொகையை 2,454 போக்குவரத்து பணியாளர்களுக்கு 497 கோடியே 32 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.  மேலும் அனைத்து பணியாளர்களின் வங்கி கணக்கில் உடனடியாக ஓய்வூதிய தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்காக இயக்கப்படும் இலவசப் பேருந்துகளால் ஏற்கனவே இயங்கிவருகின்ற பேருந்துகள் குறைக்கப்படாது. பின்க்(pink) பேருந்துகள் என சொல்லப்படும் பெண்களுக்கான சிறப்பு பெருந்துகள் செயல்படுத்துவது குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

அரசியலில் நானும் இருக்கிறேன் என்ற காரணத்திற்காகவே ஓ பன்னீர்செல்வம் வெற்று அறிக்கைகளை விட்டுக் கொண்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய நிலுவை தொகையை முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சொல்லித்தான் வழங்கினேன் என்பது சிரிப்பை வரவழைக்கிறது. தொழிலாளர்களின் நலன் கருதியே தமிழக அரசு வழங்கியுள்ளது.  ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததால் ஓய்வூதிய நிலுவை வழங்கப்பட்டதாக அவர் கருத்து தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்தார். 


Tags:    

Similar News