உங்க ஸ்மார்ட் ரேஷன் கார்டில் மொபைல் நம்பர் மாத்தணுமா..? வாங்க பாக்கலாம்..!
Smart Card Phone Number Change-தமிழக பொதுவிநியோக திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ரேஷன் கார்டில் மொபைல் எண் மாற்றுவது எப்படி என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது.;
Smart Card Phone Number Change
Smart Card Phone Number Change-ல் மொபைல் எண்ணை மாற்ற வேண்டும் எனில் என்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்று இங்கு பார்ப்போம்.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் நியாய விலை கடைகளின் மூலம் குறைந்த விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காகித அட்டைகளில் ரேஷன் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
பிறகு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து Ration Card -களையும் Smart Card வடிவில் வழங்கப்பட்டன. இவை தமிழ்நாடு பொது விநியோக அமைப்பால் (Tamil Nadu Public Distribution System – TNPDS) செயல்படுத்தப்படுகிறது.
Smart Card வழங்கப்பட்டவுடன் அதனுடன் Aadhaar Card மற்றும் Mobile Number -ஐ இணைக்க வேண்டும். பிறகு ஒவ்வொரு மாதமும் அந்த Smart Ration Card -க்கு உணவு பொருட்கள் வழங்கப்படும்.
பல காரணங்களுக்காக உங்களின் ரேஷன் அட்டையில் Update அல்லது Correction செய்ய வேண்டி இருக்கலாம். அவ்வாறு திருத்தங்களை செய்வதற்கான வசதிகளை TNPDS, Online மூலமாகவே வழங்குகிறது.
TNPDS இணையதளத்தில் Smart Ration Card -ல் Correction செய்வதற்கு வழங்கப்படும் சேவைகள் என்னென்ன?
- உறுப்பினரை சேர்த்தல்
- ஸ்மார்ட் அட்டையில் முகவரி மாற்றம் செய்தல்
- குடும்பத்தலைவரை மாற்றம் செய்தல்
- குடும்ப உறுப்பினரை நீக்குதல்
- அட்டை தொடர்பான சேவை நிலையை அறிதல்
மேற்கண்ட சேவைகளை TNPDS இணையதளத்தின் மூலம் பெறமுடியும். இதை பயன்படுத்தி நீங்கள் வீட்டில் இருந்து Online மூலமாகவே திருத்தங்களை செய்யலாம்.
இப்பொழுது உங்களின் ஸ்மார்ட் அட்டையில் மொபைல் எண்ணை மாற்றுவதற்கான செயல்முறையை பற்றி காண்போம். ஸ்மார்ட் அட்டை அறிமுகப்படுத்திய காலகட்டத்தில் ரேஷன் அட்டையில் மொபைல் எண்ணை மாற்ற வேண்டுமென்றால் 1967 ( OR ) 1800-425-5901 என்ற Toll Free எண்ணிற்கு கால் செய்து மாற்றம் செய்துகொள்ளும் வசதி இருந்தது.
ஆனால்,தற்போது அவ்வாறு செய்ய முடியாது. தற்போது Online மூலமாக மொபைல் எண்ணை மாற்ற முடியாது. நேரடியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தான் மாற்ற முடியும்.
ஓகே, அப்படி என்றால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு என்னென்ன ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்? அங்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
மொபைல் நம்பர் மாற்றுவதற்கு கொண்டுசெல்ல வேண்டிய ஆவணங்கள் :
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் போது கீழ்கண்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.
- Smart Ration Card
- ரேஷன் அட்டையில் உள்ள குடும்பத்தலைவரின் ஆதார் கார்டு
- புதியதாக Update செய்யும் மொபைல் நம்பர்
மேலே கூறியுள்ள ஆவணங்களை எடுத்துக்கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.
அங்கு ரேஷன் அட்டையில் மொபைல் நம்பர் மாற்ற வேண்டும் என்று கூறினால், அதற்கான படிவத்தை வழங்குவார்கள். அந்த படிவத்தை முழுமையாக நிரப்ப வேண்டும். நிரப்பிய பிறகு அதனுடன் ஆதார் அட்டை நகல் மற்றும் ஸ்மார்ட் கார்டு நகல் ஆகியவற்றை இணைத்து அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
சில நாட்களுக்குப் பின்னர் ஸ்மார்ட் ரேஷன் அட்டையில் மொபைல் எண் Update செய்யப்படும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2