வந்தவாசி தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்

வந்தவாசி அருகே தென்னாங்கூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 'இலக்கியமும் வாழ்க்கையும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

Update: 2022-04-22 02:33 GMT

அரசு கலை அறிவியல் கல்லூரியில் ‘இலக்கியமும் வாழ்க்கையும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் 'இலக்கியமும் வாழ்க்கையும்' என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது. அந்த கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பில் நடந்த இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ச.யுவராஜன் தலைமை தாங்கினார்..

கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் ரா.சுமதி முன்னிலை வகித்தார். கல்லூரிப் பேராசிரியை ர.இந்துமதி வரவேற்றார். புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய ஓய்வுபெற்ற பேராசிரியரும், எழுத்தாளருமான ராஜா சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசுகையில், மனித வாழ்க்கைக்கு மொழி அடிப்படையானது. ஆங்கிலத்தை அறிவாக பார்க்காமல் மொழியாக கற்றால் வாழ்க்கைக்குத் துணை நிற்கும். இலக்கியங்களைத் தேடி கற்கும் மாணவர்கள் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறுவர் என்றார்.

கல்லூரிப் பேராசிரியர்கள் ம.கண்ணன், சண்முகசுந்தரி, பரத், அம்ஜத், கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆங்கிலத்துறை மாணவி மோனிஷா நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News