வந்தவாசி அருகே பெற்றோர் திட்டியதால் பிளஸ்-2 மாணவர் தீக்குளித்து தற்கொலை

வந்தவாசி அருகே பெற்றோர் திட்டியதால் பிளஸ்-2 மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-07-05 13:42 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பழவேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பிரபு. இவரது மனைவி மலர். இவர்களது மகன் அன்பரசன் (வயது 18 ).கடந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். எனினும் 285 மதிப்பெண்கள் மட்டுமே அவர் பெற்றிருந்தார்.

நேற்று காலை அன்பரசன் வெளியே சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது அவரது பெற்றோர் பொறுப்பே இல்லாமல் இருக்கிறாய் என்று  திட்டினார்களாம்.

இதில் மன வேதனை அடைந்த அன்பரசன் வீட்டிலிருந்த 3 லிட்டர் மண் ணெண்ணெயை எடுத்துக் கொண்டு வீட்டின் மாடிக்குச் சென்று உடலில் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அன்பரசனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அன்பரசன்  பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தெள்ளார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News