வந்தவாசியில் இருவர் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம்
வந்தவாசியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சூர்யா மற்றும் அர்ஜுன் ஆகிய இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 200க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் கோட்டை மூலைப் பகுதியில் இருந்து பேரணியாக சென்று வந்தவாசி தேரடி பகுதி மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் அரக்கோணம் அருகே சோகனூர் கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சூர்யா மற்றும் அர்ஜுன் ஆகிய இரண்டு பேரை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.