வள்ளலார் திருச்சபையின் மகளிர் தின விழா

வள்ளலார் திருச்சபையில் கம்பன் தமிழ் சங்க விழா மகளிர் தின விழா நடைபெற்றது;

Update: 2024-02-26 02:25 GMT

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய கம்பன் கழக தலைவர்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் வள்ளலார் திருச்சபையின் சார்பில் மகளிர் தின விழா கம்பன் தமிழ் சங்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சுப்பிரமணி அடிகளார் தலைமை தாங்கினார். ஆசிரியர் பூங்கொடி அனைவரையும் வரவேற்றார். வள்ளலார் போற்றிய பெண்கள் என்னும் தலைப்பில் மங்கையர்க்கரசி, அபிராமி, குணா ஜெகதீசன் ஆகியோர் கவிதை பாடினார்கள்.

பெண்ணின் பெருமை என்னும் தலைப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் வில்லுப்பாட்டு பாடி அசத்தினார்கள்.

மாணவர்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணம் குடும்ப சூழலா, கல்வி சூழலா என்றும் தலைப்பில் லதா பிரபு லிங்கம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் பேராசிரியர் மான் விழி, கயல்விழி, கவிஞர் தேவிகா, வனிதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

இறுதியில் குடும்ப சூழலே என நடுவர் தீர்ப்பு வழங்கினார்.

தொடர்ந்து செம்மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நல்லாசிரியர் விருது பெற்ற அல்லிராணி அவர்களுக்கு விழாவில் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு கம்பன் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் எழுத்தாளர் கவிஞர் சண்முகம் பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் தெய்வத்திரு வள்ளலார் பற்றிய செய்திகளையும், அருட்பா கருத்துக்களையும் பெருமைகளையும் மாணவர்களிடையே விளக்கி பேசினார்.

விழாவில் ஆசிரியர் ஜெய்சங்கர் , தங்க விஸ்வநாதன் ,  தமிழ் அறிஞர்கள் ,  தமிழ் ஆசிரியர்கள் ,  வள்ளலார் பக்தர்கள், வள்ளலார் திருச்சபையின் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News