ராஜன்தாங்கல் ஊராட்சியில் வாரச்சந்தை ரூ.13 லட்சத்துக்கு ஏலம்
ராஜன்தாங்கல் ஊராட்சியில் தளவாகுளம் வாரச்சந்தை ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போனது.
கீழ்பெண்ணாத்தூர் தொகுதி செய்திகள்
கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் ராஜன்தாங்கல் ஊராட்சியில் உள்ள தளவாகுளம் வாரச்சந்தையில் சுங்கவரி வசூலிப்பதற்காக 2023-2024-ம் ஆண்டுக்கான ஏலம் இன்று ராஜன்தாங்கல் ஊராட்சி மன்ற வளாகத்தில் நடந்தது.
கீழ்பென்னாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர் மலர் ஏழுமலை, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயபாரதி மணி, ஆவின் இயக்குனர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், அனுராதாசுகுமார், சூர்யா, சங்கர், கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் செல்வமணி, தொப்பளான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய ஆணையாளர் பரிமேலழகன் ஏலத்தை நடத்தினார். இதில் 27 பேர் தலா ரூ.1 லட்சம் வீதம் டெபாசிட் தொகைக்கான காசோலை செலுத்தி ஏலத்தில் பங்கேற்றனர். அப்போது ராஜன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ரூ.13 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார்.
கடந்த ஆண்டு ரூ.12 லட்சத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. ஏலத்தின்போது ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உலக காச நோய் விழிப்புணர்வு ஊர்வலம்:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அன்னை நைட்டிங்கேல் செவிலியர் பயிற்சி கல்லூரி இணைந்து உலக காச நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
மருத்துவர் ஸ்ரீதர் தலைமை தாங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார் . சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன் வேட்டவலம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . கல்லூரி முதல்வர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.
ஊர்வலம் சொரத்தூர் மற்றும் வைப்பூர் கிராமங்களில் உள்ள வீதிகளில் நடைபெற்றது . அப்போது காச நோய் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
இந்த விழிப்புணர் ஊர்வலத்தில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், செவிலியர்கள், சுகாதார நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் பொது மக்களுக்கு இலவசமாக நிலவேம்பு குடிநீர் முக கவசம் வழங்கப்பட்டது.