திருவண்ணாமலை மாவட்டத்தில் மது விற்பனை செய்த இருவர் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையில் கள்ள சாராயம் விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையில் கள்ள சாராயம் விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்
வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமம் குட்டிச் சாலை புளிய மரத்தின் அருகே கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக கீழ்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கீழ்கொடுங்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 51) என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் முத்துராமலிங்கத்தை கைது செய்து அவரிடம் இருந்த 41 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன ஓலை பாடி கிராமத்தில் சுமார் 1250 லிட்டர் கள்ள சாராய ஊரல் மற்றும் 250 லிட்டர் கள்ள சாராயம் கண்டுபிடிக்கப்பட்டது. கள்ள சாராயத்தை கீழே கொட்டி காவல்துறையினர் அழித்தனர். கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்தனர்.
போளூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்கள் நடத்திய கள்ளசாராய தேடுதல் வேட்டையில் போளூர் காட்டுப்பகுதியில் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சுமார் 275 லிட்டர் கள்ள சாராயம் மற்றும் 35 லிட்டர் எரி சாராயம் கைப்பற்றப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது.