கீழ்பென்னாத்தூரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பயிற்சி முகாம்
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை சார்பாக உள்ளாட்சி அமைப்புகள் சமூக நிறுவனங்களில் ஒருங்கிணைப்பு செய்தல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
ஒன்றிய ஆணையாளர் சம்பத் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சுபாஷினி வரவேற்றார். பயிற்சியை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன் தொடங்கி வைத்து பேசினார். பயிற்சியில், மாவட்ட முதன்மைப் பயிற்றுனர்கள் ரமணி, உமா ஆகியோர் கலந்து கொண்டு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பிற துறைகளுடன் இணைந்து கிராம வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கி பேசினர்.
பயிற்சியில் வேளானந்தல், கல்லாயி, அகரம், சாணிப்பூண்டி, நீலந்தாங்கல், ஆங்குணம், ராஜன்தாங்கல், அணுக்குமலை, ஜமீன் கூடலூர், ஆவூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள், கிராம கூட்டமைப்பு நிர்வாகிகள், கிராம வறுமை ஒழிப்பு சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர். 2 நாட்கள் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் கையேடு, பேனா, பேக், சான்றிதழ், உதவித்தொகை வழங்கப்பட்டன. முடிவில் உதவியாளர் (ஊராட்சிகள்) காண்டீபன் நன்றி கூறினார்.