ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி முகாம்
கீழ்பெண்ணாத்தூரில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையத்தில் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது
கீழ்பெண்ணாத்தூரில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையத்தில் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண்துறை மூலம் விதை உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த பயிற்சியில் வேளாண்மை துறை சார்ந்த மானிய திட்டங்கள் விதை பண்ணை அமைத்தலின் முக்கியத்துவம், பயிர் சாகுபடியில் விதை நேர்த்தி, பயிர் சுழற்சி முறை, தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்தும் வட்டார உதவி இயக்குனர் அன்பழகன் விளக்கி கூறினார்.
துணை வேளாண் அலுவலர் சுப்பிரமணியன் பயிர் சாகுபடியில் தரமான விதை தேர்வு, சான்று விதைகள் ,உற்பத்தி இயற்கை விவசாயம் குறித்தும், வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் கவாஸ்கர், விதை பண்ணை அமைத்தல், பதிவு செய்தல், தரமான விதை உற்பத்திக்கான வழிமுறைகள், பயிர் சாகுபடியில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை பயிர் வளர்ச்சி யுத்திகள் குறித்தும் பயிற்சி அளித்தார்.
இதில் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் சிவக்குமார் கலந்துகொண்டு பேசுகையில் விதை பண்ணை உற்பத்தியாளர்கள் தரமான விதை உற்பத்தியின் அவசியம், விவசாயிகளின் கௌரவ நிதி திட்டம் சிறப்பு முகாம் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு உதவி விதை அலுவலர்கள் பார்த்தசாரதி, தண்டபாணி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
வட்டார தொழில் நுட்ப மேலாளர் சங்கீதா, உதவி தொழில்நுட்ப மேலாளர் மீனா, வேளாண் விரிவாக்க மைய அலுவலர்கள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.