திருவண்ணாமலை அருகே டிராக்டர் - கார் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே டிராக்டர் - கார் மோதி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.;

Update: 2024-02-22 06:16 GMT

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருமணத்திற்காக குடும்பத்துடன் காரில் சென்ற போது கீழ்பென்னாத்தூர் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது திடீரென மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலையிலிருந்து திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் கீழ்பெண்ணாத்தூர் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த டிராக்டரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த காரில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான கார் ஆந்திர மாநிலம் பதிவெண் கொண்டதாக உள்ளது. உயிரிழந்த 4 பேரின் உடல்கள், பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதிகாலையில் நடந்த விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது பனிமூட்டம் அதிகம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

அரசுப் பேருந்து மரத்தில் மோதல்: 5 பேர் பலத்த காயம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அரசுப் பேருந்து மரத்தில் மோதியதில், 5 பேர் பலத்த காயமடைந்தனா். பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது.

திருவண்ணாமலை-கிரிவலப் பாதை, நிருதி லிங்கம் அருகே வந்தபோது எதிா்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோதியது. இதில், பேருந்தில் பயணம் செய்த 5 பேர் பலத்த காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனா்.

இதுகுறித்து, திருவண்ணாமலை வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த விபத்தால் கிரிவலப் பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News