திருவண்ணாமலை: குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.;
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது
தாசில்தார் சாப் ஜான் தலைமை வகித்தார். மண்டல துணை தாசில்தார் வேணுகோபால், துணை தாசில்தார் (தேர்தல் பிரிவு) மாலதி, தலைமையிட நில அளவர் சாகுல்அமீது முன்னிலை வகித்தனர். தலைமையிடத்து துணை தாசில்தார் தனபால் வரவேற்றார்.
பயிற்சியில் திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் பிரபாகரன், சிறப்பு குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராஜசேகரன், சைல்டு லைன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக் பங்கேற்றனர்.
குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, குழந்தைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கிராம சபைக் கூட்டங்களில் குழந்தைகளின் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுக்க குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கவும்.
மேலும், திருமணம் மற்றும் குழந்தை பிரச்சினைகள் தொடர்பாக சைல்டு லைன் 1098 என்ற இலவச எண்ணில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சைல்டு லைன் குழு உறுப்பினர்கள் அசோக்குமார், அஞ்சலா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சைல்டு லைன் குழு உறுப்பினர் தீபிகா நன்றி கூறினார்.
எண்ணும் எழுத்தும் கற்றல் நிகழ்ச்சி
ராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கற்றலின் இனிமை திருவிழா எண்ணும் எழுத்தும் கற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரா.வாசுகி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் தாமரைச்செல்வி வரவேற்றார். இதில் 1-ம்வகுப்பு முதல் 3-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு குழந்தைகளின் கற்றல் திறன்கள், அவர்களின் கை வண்ணங்களால் வரைந்த ஓவியங்கள், மழலைக் குரல்களில் பாடல்கள் பாடுதல், கதை கூறுதல் போன்ற நிகழ்வுகளை பெற்றோர்கள் பாராட்டினர். பின்னர் குழந்தைகள் யோகாசனம் செய்து காட்டினார்கள்.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் பிரபாகரன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கேழ்வரகு அடை, தேநீர் வழங்கப்பட்டது.