கீழ்பெண்ணாத்தூர் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் தகராறு: மூவர் கைது
கீழ்பெண்ணாத்தூர் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்
திருவண்ணாமலை மாவட்டம் ழ்பென்னாத்தூர் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக மூவரை காவதுறையினர் கைது செய்ததையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
கீழ்பென்னாத்தூர் அருகே கருங்காலிகுப்பம் கிராமத்தில் விவேகானந்தர் காலனி பகுதியில் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
இதனையடுத்து கடந்த 22-ந் தேதி மாலை குன்னங்குப்பம் பகுதியில் உள்ள குளத்தில் விநாயகர் சிலை கரைக்க காவதுறையினர் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் கருங்காலிகுப்பத்தில் உள்ள ஏரியில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக அப்பகுதி மக்கள் ஊர்வலமாக சென்றனர். அதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த வழியாக ஊர்வலம் செல்லக்கூடாது என கருங்காலி குப்பத்தில் வசிக்கும் சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த காவதுறையினர் யர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் விரைந்து வந்து இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அன்று நள்ளிரவுக்கு பின்னர் அங்குள்ள ஏரியில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரது வீட்டுக்குள் நுழைந்த சிலர் வீட்டை சேதப்படுத்தியும் அங்கிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியும் உள்ளனர். இது தொடர்பாக நாராயணன் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நேற்று கருங்காலி குப்பம் காலணியை சேர்ந்த ஐந்து பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்துள்ளனர்.
ஐந்து பேரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தகவல் பரவியதும் அந்த காலனியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பேர் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது.. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் குவிக்கப்பட்டனர்.
பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சு வார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனிடையே காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட விவேகானந்தர் காலனியைச் சேர்ந்த 5 பேரில் சூர்யா , லோகநாதன் , சரவணன் ஆகிய மூவர் மீது வழக்குபதிந்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். மற்ற 2 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக கருங்காலிகுப்பத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.