திருவண்ணாமலை: கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

Update: 2022-02-10 13:35 GMT

அங்கன்வாடி மையத்தில் சமைக்கப்படும் உணவினை உண்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம் கீரனூர் கிராமத்தில் ரூபாய் 9.77 லட்சம் மதிப்பீட்டில் பெரிய ஏரியின் நீர் வரத்து வாய்க்காலில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ்,  அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வேளானந்தல்: வேளானந்தல் கிராமத்தில் ரூபாய் 3.63 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.

கோணலூர்: கோணலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நியாயவிலைக் கடையில் பொருட்கள் இருப்பு மற்றும் விநியோகம் செய்யப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்து பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப் படுகிறதா என்பதை பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

கோணலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். அங்கு தயாரிக்கும் உணவினை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். கோணலூர் கிராமத்தில் ரூபாய் 2.87 லட்சம் மதிப்பீட்டில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கருங்கல்பட்டு: கருங்கல்பட்டு கிராமத்தில் ரூபாய் 3.60 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

ராஜந் தாங்கள்: ராஜந் தாங்கள் ஒன்றியம் இலுப்பன்தாங்கல் கிராமத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 1.70 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் வீடு கட்டும் பணியினை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆவூர்: ஆவூர் கிராமத்தில் ரூபாய் 7.65 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சாலை பணிகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News