கீழ்பென்னாத்தூர் அருகே பெயிண்டர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை பணம் திருட்டு

கீழ்பென்னாத்தூர் அருகே பெயிண்டர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2023-06-16 10:35 GMT

கீழ்பென்னாத்தூர் அருகே பெயிண்டர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆராஞ்சி-குமரகுடியை சேர்ந்தவர் சுரேஷ் , பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி.

இந்த நிலையில் காலை வயல் பணிக்காக சென்ற செல்வி பிற்பகல் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது பூஜை அறையில் இருந்த மரப்பெட்டியின் பூட்டை உடைத்து அதில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.8.50 லட்சம் இருக்கும்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரனை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

பின்ன அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் 'கவ்வி' பிடிக்கவில்லை. இந்த சம்பவம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சாராயம் பதுக்கியவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் இரும்பிலி கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது காவாங்கரை பகுதியில் 2 லாரி டியூப்களில் 60 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்த செல்வதுரை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இது சம்பந்தமாக செல்வதுரை மீது கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News