பயனாளிகளுக்கு வீடு பழுது பார்க்கும் ஆணைகளை வழங்கிய துணை சபாநாயகர்!
கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் பயனாளிகளுக்கு வீடு பழுது பார்க்கும் ஆணைகளை துணை சபாநாயகர் வழங்கினார்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுபாா்த்தல் திட்டத்தின் கீழ், பணி ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி கலைமணி தலைமை வகித்தாா்.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஞானசௌந்தரி மாரிமுத்து, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மெ.பிருத்திவிராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி ஒன்றிய ஆணையா் பரமேஸ்வரன் வரவேற்றாா்.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 194 பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:
நமது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் வழங்கி வருகிறார்.
ஏழை, எளிய வீடு இல்லாத பொதுமக்களுக்கு புதிய வீடுகள் கட்டவும், பழைய வீடுகளை பழுது பாா்க்கவும் பணி ஆணைகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவிலேயே இதுபோன்ற சிறப்புத் திட்டங்கள் தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. பணி ஆணை பெற்ற பயனாளிகள் மழைக்காலம் வருவதற்குள் வீடுகளை கட்டி முடித்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
துரிஞ்சாபுரம்
இதேபோல, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை சட்டப்பேரவை துணைத் தலைவா் வழங்கிப் பேசியதாவது.
15 தினங்களுக்கு முன்பு கலைஞரின் க ன வு இல்ல திட்டத்தில் 305 பயனாளிகளுக்கு அரசு வீடு கட்டும் ஆணையை வழங்கி தொடங்கி வைத்தோம் அதேபோல் இப்பொழுது அரசு பழைய அரசு தொகுப்பு வீடுகள் கட்டியது பழுது பார்ப்பதற்கு இப்பொழுது தனி நிதி ஒதுக்கீடு செய்து அதன் மூலம் மக்கள் வீடுகளை பழுது பார்த்து பயன்பெற வேண்டும் என்பதற்காக நமது துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 178 பயனாளிகளுக்கு வீடு பழுது பார்க்கும் ஆணையை இப்பொழுது வழங்கியுள்ளோம். அதன் மூலம் நீங்கள் தங்களின் வீடுகளை பழுது பார்த்து அதன் மூலம் தமிழக அரசின் திட்டங்களை பயன்பெறலாம் .
மேலும் பெண்கள் அரசு பேருந்தில் விடியல் பயணம், பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை, ஆ ண் , பெண் எ ன இருவருக்கும் உயர்கல்வி படிப்பதற்கு மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் தமிழக மக்களுக்காகவும் படிக்கும் இளைஞர்களுக்காகவும் குறிப்பாக பெண்களுக்காகவும் த மி ழ க முதல்வர் வழ ங்கி வருகி றார் என்றார்.
விழாவில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தமயந்தி ஏழுமலை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் , ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.