தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் மையம் திறப்பு

தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் மையத்தை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்;

Update: 2022-05-25 06:59 GMT

கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட கருந்துவாம்பாடியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையத்தை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்.

கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட கருந்துவாம்பாடியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் மையத்தை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்.

பின்னர் அவர்  கூறியதாவது:திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 64 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் இம்மையங்களில் ஆன்லைன் பதிவு கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் அந்தந்த தாலுகா அளவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆன்-லைன் பதிவை மாற்றி அமைத்துள்ளனர். எனவே விவசாயிகள் அனைவரும் ஆன்லைன் பதிவு செய்து பயன் பெற்றுக் கொள்ள வேண்டும்  என்றார்.

நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. தி.சரவணன் , ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை , முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் அண்ணாமலை, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பாரதிராமஜெயம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,ஊராட்சிமன்ற தலைவர் தமிழ்ச்செல்வன் உள்பட அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News