மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய துணை சபாநாயகர்
கீழ்பெண்ணாத்தூரில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை துணை சபாநாயகர் வழங்கினார்.
கீழ்பென்னாத்தூரில் 380 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர்ருமான பிச்சாண்டி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைக்குழு தலைவரும், பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், திமுகநகர செயலாளர் அன்பு, முன்னாள் பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். அரசு ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் தேவஆசீர்வாதம் மற்றும் பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியை அனிதா ஆகியோர் வரவேற்றனர்.
இவ்விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் 183 மாணவர்கள் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் 197 மாணவிகள் என மொத்தம் 380 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். தொடர்ந்து, அரசு பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் என தலைமை ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை துணை சபாநாயகரிடம் வழங்கினர்..
நிகழ்ச்சியில், பேரூராட்சி துணைத்தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி, பெண்கள் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அம்பிகாராமதாஸ், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைக்குழுதுணை தலைவர் மணி, பேரூராட்சி கவுன்சிலர்கள் பாக்யராஜ், கவிதா ஏழுமலை, கல்வி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள், திமுகநகர நிர்வாகிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,வட்டார கல்வி அலுவலர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.