கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி சுங்கவரி வசூல் ஏலம்
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் சுங்கவரி வசூல் ரூ.4 லட்சத்து 97 ஆயிரத்துக்கு ஏலம் போனது.;
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் 2022-2023ம் ஆண்டுக்கான சுங்கவரி வசூல், புளியமர மகசூல் ஆகிய இனங்களுக்கான ஏலம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மன்ற தலைவர் கோ.சரவணன் தலைமையில் நடந்தது.
ஏலத்தை செயல் அலுவலர் ஜெயப்பிரகாஷ் நடத்தினார். ரூ.4 லட்சத்து 97 ஆயிரத்துக்கு ஏலம் போனது. நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளர் தனமல்லி, பேரூராட்சி துணைத்தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.