அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்

70 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

Update: 2024-09-06 01:32 GMT

ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

70 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், மேக்களூர் மதுரா ராஜபாளையம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் செல்வவிநாயகர் ஆலய அஷ்டபந்தனை கும்பாபிஷேகம் 7 0 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்வுகள் துவ ங் கி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பிரவேசம், முதற்கால யாகசாலை பூஜைகள் ஹோமங்கள், பூர்ணாஹுதி, தீபாராதனை, காட்டப்பட்டது. நேற்று காலை மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு விசேஷ ஹோமங்கள், நாடி சந்தானம், பூர்ணாஹுதியு டன் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

இந்த கும்பாபிஷேக விழாவில் கீழ்பெண்ணாத்தூர் கீக்களூர், மேக்களூர், ராஜா தோப்பு உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளுவா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா கணபதி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசி திருவள்ளுவா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா கணபதி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, யாகசாலை அமைத்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி உள்ளிட்டவையும், ஹோமங்கள், கும்ப அலங்காரம், வேதிகாா்ச்சனை உள்ளிட்டவையும், மூலமந்திர ஹோமம், வேத பாராயணம், பூா்ணாஹுதி உள்ளிட்டவையும் நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை தத்வாா்ச்சனை, நாடி சந்தானம், மகா பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. சிவாச்சாரியா்கள் கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோயிலை வலம் வந்தனா்.

தொடா்ந்து, காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட ஆன்மிக இயக்கத் தலைவா் செந்தில்குமாா், மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், கல்லூரித் தலைவா் அருணாசலம், துணைத் தலைவா் கணேஷ்குமாா் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

Similar News