சிறப்பு மனு நீதி நாள் முகாமில் 101 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

பவித்திரம் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் சிறப்பு முகாமில் 101 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;

Update: 2022-03-18 06:12 GMT

பவித்திரம் கிராமத்தில் மனுநீதி நாள் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.

திருவண்ணாமலை தாலுகா பவித்திரம் கிராமத்தில் மனுநீதி நாள் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.

தாசில்தார் எஸ்.சுரேஷ் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.ஜெகதீசன், மண்டல துணை தாசில்தார் மு.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கோ.குமரன் கலந்து கொண்டு 101 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் வருவாய்த்துறை சார்பில் நத்தம் பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வேளாண்துறை சார்பில் இடுபொருள், உயிர்உரம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில் மொத்தம் 116 மனுக்கள் பெறப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற தலைவர் கே.வேளாங்கன்னி, வேளாண் அலுவலர்கள் ஆர்.ஷோபனா, ஏ.சத்யநாராயணன், கால்நடை மருத்துவர் ரா.ராஜேஸ்வரி, சார் ஆய்வாளர் ராஜ்குமார், சாலை ஆய்வாளர் ஜெ.சுகுணா, கிராம நிர்வாக அலுவலர்கள் அ.ஏழுமலை உத்தரகுமார், கி.ஜெயக்குமார் ஆனந்தகுமார், ஜெயலட்சுமி உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News