மாமனார் வீட்டில் திருடிய மருமகன்: மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைப்பு

தனது மாமனாரின் வீட்டிலேயே நகை மற்றும் பணம் திருடிய நபர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 3 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சம் பணம் மீட்பு

Update: 2021-09-07 07:08 GMT

மாமனார் வீட்டில் திருடிய மருமகன் கைது செய்யப்பட்டார்

கீழ்பென்னாத்தூர் வட்டம், சிறுநாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். கடந்த ஜூன் 29ஆம் தேதி மேல்மலையனூர் அருகே மானந்தல் கிராமத்தில் வசித்து வந்த அவரது  தந்தை இறந்துவிட்டதால், குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளார், பின்னர் ஆகஸ்ட்  03ம் தேதி சிறுநாத்தூருக்கு வந்து நிலத்தை சுற்றி பார்த்துவிட்டு, பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு மானந்தல் சென்று விட்டார்.

ஆகஸ்ட் 05ம் தேதி அவரது  வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக மைத்துனர் போன் மூலம் சொன்ன தகவலை அடுத்து,  வீட்டை பார்த்தபோது வீட்டின் கதவு மற்றும் பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்த இரண்டு ஒரு சவரன் செயின், ஒரு அரை சவரன் மோதிரம், ஒரு கால் சவரன் மோதிரம், ஒரு கால் காசு என மொத்தம் 3 சவரன் தங்க நகையும், இரண்டு லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் காணாமல் போனது தெரிய வந்தது.

இதனையடுத்து  காவல் நிலையத்தில் புகார் செய்து, கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  கீழ்பெண்ணாத்தூர் காவல் ஆய்வாளர், ராமனின் மருமகனான விஜயகுமார் என்பவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது தனது மாமனார் ராமன் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் சென்னையில் திருட்டு மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளியே வந்து இருப்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்து, அவரிடமிருந்து திருடுபோன இரண்டு ஒரு சவரன் செயின், ஒரு அரை சவரன் மோதிரம், ஒரு கால் சவரன் மோதிரம், ஒரு கால் காசு என மொத்தம் 3 சவரன் தங்க நகைகள், இரண்டு லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

Tags:    

Similar News