கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தில் நிதி ஆணைய செயலாளர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 6வது மாநில நிதி ஆணைய இணை செயலாளர் ரேவதி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-10-01 07:25 GMT

மாநில நிதி ஆணைய இணை செயலாளர் ரேவதி தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 6வது மாநில நிதி ஆணைய இணை செயலாளர் ரேவதி ஆய்வு மேற்கொண்டார். பொது விவாதம்,  பணியாளர்கள் விவரம்,  கட்டமைப்பு வசதிகள்  மற்றும் மேம்பாடு ,  ஊராட்சி ஒன்றியத்தின் வரவு-செலவு திட்டம்  குறித்த ஆய்வினை மேற்கொண்டார். மேலும் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஆதாரம் தேவை குறித்தும்,  அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து சோமாசிபாடி ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர்,  செயலாளர் ஆகியோரிடம் வரவு செலவு திட்ட பதிவேடுகளை சரியாகப் பராமரிக்க வேண்டும்,  பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் செய்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது உதவி இயக்குனர் ஊராட்சிகள் லட்சுமி நரசிம்மன்,  மாநில நிதி ஆணைய இணை இயக்குனர் சேகர்,  ஒன்றிய ஆணையர் பழனி,  சோமாசிபாடி ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை மாவட்ட ஊராட்சி உறுப்பினர்  ஆறுமுகம் , ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News