கூடுதல் விலையில் உரம் விற்பனை; விவசாயிகள் புகார்

கூடுதல் விலையில் உரம் விற்கப்படுவதாக, கீழ்பென்னாத்தூரில் நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில், விவசாயிகள் புகார் கூறினர்.;

Update: 2022-12-17 00:49 GMT

குறை தீர்வு கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் விவசாயிகள்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) குமரன் தலைமையில் நடைபெற்றது.

துணை வேளாண் அலுவலர் சுப்பிரமணி, தோட்டக்கலை உதவி இயக்குனர் அமுல் சேவியர் பிரகாஷ், வட்டார கல்வி அலுவலர் மோகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்பாபு, தலைமையிட துணை தாசில்தார் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட விவசாயிகள் பலரும் கலந்துகொண்டு பேசினர். அப்போது விவசாயிகள் கூறியதாவது;

உரம், யூரியா கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீடு நிலுவை தொகை விரைவில் கிடைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீடு நிலுவைத் தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு பெரியம்மை தாக்குதல் ஏற்பட்டு உள்ளதால், தடுப்பூசி போட வேண்டும். சாலைகளில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும்.

ஏரிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றவும், வரத்து கால்வாய்களில் புதர்களை நீக்கவும், தோட்டக்கலைத் துறையில் வழங்கப்படும் விதைகள் தரமானதாக இல்லை. சமூக தணிக்கை குறித்த தகவல் தரவேண்டும். 'ஊராட்சிகளில் நிதி இல்லை' எனக் கூறுவதை தவிர்த்து, உலர்களம் அமைக்கவும், தோட்டக்கலை பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைத்தும் தரவேண்டும்.

சுகாதார பணியாளர்களுக்கு ஆயுள் காப்பீடு செய்ய வேண்டும். வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

அதைத் தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதில் அளித்தனர். முடிவில் உதவி வேளாண் அலுவலர் சாந்தகுமார் நன்றி கூறினார்.

Similar News