கீழ் பென்னாத்தூரில் புறம்போக்கு இடத்தில் இருந்த கோவில் அகற்றம்
கீழ்பென்னாத்தூர் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு இருந்த கோவில் அகற்றப்பட்டது.;
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் தனலட்சுமி நகரில் பழமையான கன்னிமார் கோவில் உள்ளது. அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டிருந்த இந்த கோவிலை சுற்றிலும் சமீபத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு கும்பாபிஷேகம் நடந்ததாக கூறப்படுகிறது.
அரசு புறம்போக்கு இடத்தில் கோவில் கட்டப்பட்டு இருந்ததால் திருவண்ணாமலை வருவாய்த்துறை புகாரின் பேரில் திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜன், சின்ராஜ், குணசேகர், கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் பாதுகாப்புடன் கோவில் மற்றும் சுற்றுச்சுவர் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
அப்போது திருவண்ணாமலை தாசில்தார் சுரேஷ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.