காட்டுவேளானந்தல் கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
காட்டுவேளானந்தல் கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.;
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா சு.பொலக்குணம் ஊராட்சி காட்டுவேளானந்தல் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கரை பகுதியில் 3 ஏக்கர் பரப்பளவை ஆக்கிரமிப்பு செய்து பயிரிட்டு இருந்த பகுதியை போலீஸ் பாதுகாப்புடன் தாசில்தார் சக்கரை முன்னிலையில் பொக்லைன் எந்திரம் உதவிேயாடு அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் குப்புஜெயக்குமார், துணைத் தலைவர் உமாதங்கராஜ், சோமாசிபாடி வருவாய் ஆய்வாளர் மகாலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, வட்ட சார் ஆய்வாளர் முனியன், சர்வேயர் கொங்குஈஸ்வரன், ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.