தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது;

Update: 2023-05-11 10:44 GMT

தண்டராம்பட்டு மத்திய ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் தண்டராம்பட்டு மத்திய ஒன்றிய திமுக சார்பில் சதா குப்பம் கிராமத்தில் திராவிட மாடல் அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் இன்பச் செழியன் அவர்கள் கலந்து கொண்டு இரண்டு ஆண்டு சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.

நிகழ்ச்சியில் தண்டராம்பட்டு ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ் ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன் ஒன்றிய செயலாளர் கோவிந்தன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய ஊராட்சி கிளைக் கழக செயலாளர் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கீழ்பென்னாத்தூர்:

வழுதலங்குணத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வழுதலங்குணம் கிராமத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார், நகர செயலாளர்கள் அன்பு, முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி தேவேந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் வல்லபன் கலந்துகொண்டு தமிழக அரசின் சாதனைகளை குறித்து பேசினார்.

இதில் மாவட்ட பிரதிநிதி குப்புசாமி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் நித்யா, ஒன்றிய துணை செயலாளர் இளம்பரிதி, ஒன்றியக்குழு உறுப்பினர் சிவகாமி தேவேந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயபாரதி மணி, ஏரிநீர் பாசன சங்க தலைவர் குணசேகரன் உள்பட பலரும் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News