கீழ் பென்னாத்தூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-07-22 07:31 GMT

கீழ் பென்னாத்தூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கீழ்பென்னாத்தூர் வட்டாரக் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டார தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் பால்தங்கம், பாபு, மரியசூசை, துணை செயலாளர்கள் நடராசன், குமார், கோமதி முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் அய்யாசாமி வரவேற்றார். திருவண்ணாமலை கல்வி மாவட்ட செயலாளர் கறீம் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரையாற்றினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் நடராசன், குலசேகரன், கலைவாணி, மகளிரணி கற்பகம், சாந்தி ஆகியோரும் பேசினர். முடிவில் வட்டார பொருளாளர் ஜானகி நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய கல்விக் கொள்கையை மத்தியஅரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும், 1.1.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கி உள்ள 3 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும், பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டும், ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷமிட்டனர்.

Tags:    

Similar News