திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
கீழ்பென்னாத்தூர் பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதன் காரணமாக கீழ்பென்னாத்தூர், கருங்காலி குப்பம், கரிக்கலாம்பாடி, ஆண்டாளூர், மாணவரம், ராயம்பேட்டை, நெடுங்காம் பூண்டி, மேட்டுப்பாளையம், சிறுநாத்தூர், குண்ணங்குப்பம், வேடநத்தம், நாரியமங்கலம், வழுதலங்குணம், கார்ணாம்பூண்டி, கணபாபுரம், மேக்களூர், கத்தாம்பட்டு, காட்டுசித்தாமூர், காட்டு நல்லாண்பிள்ளைபெற்றாள், சோமாசிபாடி, கடம்பை, ஆராஞ்சி, சோ.காட்டுக்குளம், கழிக்குளம் உள்பட 32 ஊர்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
இத்தகவலை திருவண்ணாமலை கிழக்கு செயற்பொறியாளர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.