சோமாசிபாடி கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
சோமாசிபாடி கிராமத்தில் நடைபெற்ற பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் பேரவைத் துணைத் தலைவர் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே சோமாசிபாடி கிராமத்தில் நடைபெற்ற பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளை வழங்கினார்.
சோமாசிபாடி, நம்மியந்தல் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 92 கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றில் ல் 20 மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பட்டா மாறுதல் செய்து ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சக்கரை, மண்டல துணை வட்டாட்சியர் கவுரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் மகாலட்சுமி , சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பன்னீர்செல்வம், ஊராட்சி மன்ற தலைவர்கள் , ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.