திருவண்ணாமலை அருகே புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் புதிய நியாய விலைக் கடைகள் துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.

Update: 2024-03-08 01:01 GMT

நியாய விலை கடையை திறந்து வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள மல்லவாடி ஊராட்சியில் ரூபாய் 14 லட்சத்தில் புதிய நியாய விலை கடையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணை சபாநாயகர் பிச்சாண்டி புதிய நியாய விலை கடையை திறந்து வைத்து பேசியதாவது;

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள மல்லவாடி ஊராட்சியில் வளர்ச்சி பணி கட்டிடங்களை திறந்து வைக்க வந்த போது அப்பகுதி மக்கள் என்னிடம் இரண்டு கோரிக்கைகள் வைத்தனர்.  அதில் புதிய ரேஷன் கடை வேண்டியும்,  புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் வேண்டியும் கோரிக்கை வைத்தனர்,

அந்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது புதிய ரேஷன் கடை அமைத்து திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிய அங்கன்வாடி மையம் அமைப்பதற்கும் இடத்தை தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணிகளும் துவக்கி வைக்கப்படும். மேலும் நீங்கள் கூறும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

அதே போல் தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து திட்டங்களை மக்களுக்காக வழங்கி வருகிறார்.

தமிழ்நாட்டை வளர்ச்சியான மாநிலமாக மாற்றி வருகிறார் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசினார்.

நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் ராமஜெயம் ,அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர் பாலு, வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, பொறியாளர் அருணா, ஒன்றிய கவுன்சிலர்கள் பிரபாகரன், சிவராமன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வினோத்குமார், கிளை செயலாளர்கள், பஞ்சாயத்து தலைவர் அஸ்வினி பாபு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News