ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு

கீழ்பெண்ணாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர்கள் சுப்பிரமணியம் மற்றும் வேலு நேரில் ஆய்வு;

Update: 2021-07-07 07:35 GMT

கீழ்பெண்ணாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர்கள் சுப்பிரமணியம் மற்றும் வேலு நேரில் ஆய்வு செய்தனர்

கீழ்பெண்ணாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு ஆகியோர் ஆய்வு செய்தனர். கீழ்பெண்ணாத்தூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவமனையில் சிகிச்சையில் நன்றாக இருக்கின்றதா என்ன விசாரித்தனர். மேலும் மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் அரசின் மூலம் உரிய நேரத்தில் கிடைக்கப்பெறும் என கூறினர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News