சைவம் மற்றும் திருநீற்றின் பெருமையை உலகறிய செய்தவர் மெய்ப்பொருள் நாயனார்!
சைவத்தின் பெருமையை,திருநீற்றின் பெருமையை உலகறிய செய்தவர் மெய்ப்பொருள் நாயனார், என ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞான பீடத்தின் சித்த குருஜி அருளுரை வழங்கினார்
கீழ்பென்னாத்தூரை அடுத்த சாணிப்பூண்டி கிராமத்தில் மெய்ப்பொருள் நாயனாரின் 7-ஆவது ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
விழாவுக்கு, பெரியகுளம் குமரன் தேவா் தலைமை வகித்தாா். வடசேரி நேச நாயனாா் அறக்கட்டளை துணைத் தலைவா் முருகன் முன்னிலை வகித்தாா்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவா் சிவசங்கரன் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை கமலா பீடம் நிறுவனா் பொறியாளர் சீத்தா சீனிவாச சுவாமிகள் பேசுகையில், இன்பமும் துன்பமும் நமது கர்மா அடிப்படையிலேயே அமைகிறது. எது நடந்தாலும் நன்மைக்கே என எடுத்துக் கொள்ள வேண்டும் .இந்த பிறவிலேயே நல்லதை செய்யுங்கள், நமது தாய் தந்தையரை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள், அடுத்த பிறவி வேண்டாம் என வேண்டிக் கொள்ளுங்கள் என்றார்.
கரூா் நந்தீஸ்வரா் ஞான பீடத்தின் சித்த குருஜி பேசுகையில், பூமியில் தோன்றிய 63 நாயன்மாா்களில் சைவத்தின் பெருமையை, திருநீற்றின் பெருமையை உலகறியச் செய்தவா் மெய்ப்பொருள் நாயனாா். அவா் விட்டுச் சென்ற பணிகளை உலகறியச் செய்ய வேண்டும்.
மனிதர்களுக்கு மட்டும்தான் ஆறறிவு உள்ளது எனவே இந்த அறிவை பயன்படுத்தின நாம் தெளிவு பெற வேண்டும் பிரபஞ்சத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
இறைவன் நம்மை அழகாக படைத்திருக்கிறார். சிந்திக்க ஆற்றலை தந்திருக்கிறார். உலகம் சார்ந்த பொருட்களை பற்றி தான் நாம் சிந்தனை செல்கிறது. நம்மை படைத்த கடவுளை பற்றியும், இனி எப்படி வாழ வேண்டும் என்பது பற்றியும், இயற்கையை பயன்படுத்திய எப்படி வாழ வேண்டும் என்பது பற்றியும், சிந்தித்து வாழ்வதுதான் ஞானம். அந்த ஞானத்தை பெற்று அதை தங்களது சீடர்களுக்கு போதிப்பவர்கள் தான் குருமார்கள்.
பாரதமாதா பல ஞானிகள் உருவாக்கி வருகிறார். இந்த பூமியில் தோன்றிய 63 நாயன்மார்களில் மெய்ப்பொருள் நாயனார் சைவத்தின் பெருமையை திருநீற்றின் பெருமையை உலகறிய செய்தவர். அவர் விட்டு சென்ற பணியை உலகறிய செய்ய மிகப்பெரிய சான்றாக மெய்ப்பொருள் நாயனார் திருமடத்தின் நிறுவனர் செய்து வருகிறார் என்றார்.
விழாவில் மாலை ஆறு மணி அளவில் மகா தீபாரதனை நடைபெற்றது. இரவு மெய்ப்பொருள் நாயனார் வீதி உலா நடைபெற்றது . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
செய்யாறு
செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் மெய்ப்பொருள் நாயனாருக்கு குருபூஜை இரவு நடைபெற்றது.
இவரை போற்றும் வகையில் காா்த்திகை மாதம் உத்திர நட்சத்திரத்தில் குருபூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் உள்ள மெய்ப்பொருள் நாயனாருக்கு கோயில் சாா்பில் குருபூஜை நேற்று இரவு நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். சிறப்பு அலங்கார தீபார்தனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .