சந்தையில் ஆடு வாங்க சென்றவர் மினி வேன் மோதி பலி
கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் மோதி வாலிபர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலையை அடுத்த இனாம் காரியந்தல் மேட்டுசத்திரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் ராஜா (வயது 22). ஊரில் நடக்கும் திருவிழாவுக்காக ஆடு வாங்குவதற்கு இன்று காலை கீழ்பென்னாத்தூர் அருகே தளவாய்குளம் வாரச்சந்தைக்கு ராஜா மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
நல்லாண்பிள்ளைபெற்றாள் தனியார் பள்ளி அருகே சென்றபோது எதிரில் வேகமாக வந்த மினிவேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.