அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் ஊனத்தடுப்பு முகாம்
வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொழுநோய் ஊனத்தடுப்பு முகாம் நடைபெற்றது;
வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொழுநோய் ஊனத்தடுப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு மருத்துவ அலுவலர் ஜாய்ஸ் மெக்டலின் தலைமை தாங்கினார். மாவட்ட நல கல்வியாளர் சங்கர், சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெள்ளையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன் வரவேற்றார்.
முகாமின்போது தொழுநோயால் பாதிக்கப்பட்டு ஊனமுற்ற 20 பயனாளிகளுக்கு தேவையான காலணிகள், ஊன்று கோல் மற்றும் சிகிச்சைக்கான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் வட்டார சுகாதார புள்ளியியலாளர் தமிழ்செல்வன், சுகாதார ஆய்வாளர்கள் ஆ றுமுகம், முத்துக்குமரன், அனுச்சந்திரன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.