கீழ்பென்னாத்தூா் வட்டத்தில், பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் வழங்கிய துணை சபாநாயகர்
கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் வசிக்கும் நரிக்குறவா் சமுதாயத்தைச் சேர்ந்த 123 பேருக்கு பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டன.;
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் வசிக்கும் நரிக்குறவா் சமுதாயத்தைச் சேர்ந்த 123 பேருக்கு பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டன.
நரிக்குறவர் இன மக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் இருந்துவந்ததை பழங்குடியினர் வகுப்பாக மாற்றப்பட்டது.
இதையொட்டி கீழ்பெண்ணாத்தூர் தாலுகாவில் கீழ்பெண்ணாத்தூர் கண்ணகி நகர் , வேட்டவலம் உள்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்கும் விழா கீழ்பெண்ணாத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி தலைமை வகித்தாா்.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆராஞ்சி ஆறுமுகம், நகர திமுக செயலா் அன்பு, அட்மா ஆலோசனைக் குழுத் தலைவா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் சரளா வரவேற்றாா்.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நரிக்குறவா் சமுதாயத்தைச் சேர்ந்த 123 பேருக்கு பழங்குடியினா் ஜாதி சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சுகுணா, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சீத்தாராமன், மண்டல துணை வட்டாட்சியா் மாலதி, வட்ட வழங்கல் அலுவலா் ஜான்பாஷா, மண்டல துணை தாசில்தார் மாலதி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் தனபால், கிராம நிர்வாக அலுவலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம உதவியாளர்கள், கலந்து கொண்டனர்.
முன்னதாக தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி அவர்கள், கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சோமாசிப்பாடி கிராமத்தில் நடைபெற்ற முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை துவக்கி வைத்தார்.