கீழ்பெண்ணாத்தூரில் பாரத ஸ்டேட் வங்கியின் புதிய வங்கி கிளை திறப்பு

கீழ்பெண்ணாத்தூரில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை திறந்து வைக்கப்பட்டது.;

Update: 2022-09-11 12:58 GMT

சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, அவர்கள் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையத்தை திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூரில் பாரத ஸ்டேட் வங்கியின் 28 வது கிளை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பாரத ஸ்டேட் வங்கியின் தமிழக முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  தமிழக தலைமை பொது மேலாளர் மிஸ்ரா, துணை பொது மேலாளர் சின்ஹா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்டேட் வங்கியின் செங்கல்பட்டு மண்டல மேலாளர் ஜான் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர்கள், வங்கி ஊழியர்கள், கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News