வேட்டவலத்தில் குட்கா விற்ற பெயிண்டர் கைது
வேட்டவலத்தில் குட்கா விற்ற பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.;
வேட்டவலம் எஸ்.சுமண் தலைமையில் போலீசார், மாதா கோவில் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அங்கு 2 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து போலீசார், இது தொடர்பாக பெயிண்டர் எட்வர்ட் என்பவரை கைது செய்தனர்.